2025 ஜூலை 09, புதன்கிழமை

ஹெரோய்னுடன் தந்தை, மகன் கைது

Editorial   / 2021 மே 07 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக ஹெரோய்ன் போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி கிரீன் பீல்ட் தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் நேற்றையதினம்   புலனாய்வுப் பொலிஸார் நடத்திய தேடுதலின் நடவடிக்கையின் போதே இவ்வாறு  தந்தையும்  மகனுன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து சுமார்  2,25,000 ​​​  பெறுமதியான 18.01 கிராம் அளவிலான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் கல்முனை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான போதைப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .