Editorial / 2018 ஜூலை 20 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டுமென்றால், உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்தைாப் பெறவேண்டுமென, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி அறிவித்துள்ளது.
புஞ்சி பொரளையில் உள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில், நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, டிலான் பெரேரா மேற்கண்டவாறு கருத்துரைத்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், அமைச்சர் சரத் பொன்சேகா, பாதாள உலக கோஷ்டியினரைப் பாதுகாத்து வைத்திருப்பதை, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று (19) முழு நாட்டு மக்களுக்கும் அம்பலப்படுத்தியுள்ளனர் என்றார்.
9 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
2 hours ago