2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

2017ஆம் ஆண்டுக்கான பாதீடு: நவம்பர் 10 அன்று சமர்ப்பிப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அந்தத் திட்டத்தின் மீதான விவாதம் டிசெம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரிடம் மேலும் வினவியபோது,

'இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, நானும் ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்கெனவே சந்தித்திருந்தோம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அரசாங்கம் மாற்றமடைந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்படவுள்ள 3ஆவது வரவு-செலுவுத்திட்டம் இதுவாகும்.

இதேவேளை, பெறுமதி சேர் வரி (வற்) திருத்தச்சட்டமூலம் தொடர்பில், நாளை செவ்வாய்க்கிழமை (23) அமைச்சரவை தீர்மானிக்கவுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X