2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘இணைந்து செயற்படுவோம்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மு.இராமச்சந்திரன்

மாகாண, பிரதேச,மொழி,அரசியல் ரீதியாகப் பிரிந்து நிற்பதை விடுத்து நாடு மக்கள் என்ற ரீதியில் ஒன்றுபடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார்.   

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் அழைப்பின் பேரில், கொட்டகலை சீ.எல்.எப் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேற்று (09) விஜயமொன்றை மேற்கொண்டார்.  

அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகம் தொண்டமான், காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான முத்துசிவலிங்கம் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.   

ஜனாதிபதி அங்கு உரையாற்றுகையில்,  

“நாடு என்றவகையில் அனைவருக்கும் சரிசமமான அவிருத்தி வேலைத்திட்டங்களையே நான் மேற்கொள்கின்றேன். தொண்டமான உள்ளிட்ட காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள், என்னுடன் தொடர்புகொண்டு, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவார்கள்.  

வறுமை ஒழிப்பு வருடமாகவே இவ்வருடத்தை நாம் முன்னெடுக்கின்றோம். அந்த வகையில், வறுமைக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக போதைபொருள் பாவனை காணப்படுகின்றது. அதை கட்டுபடுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றேன். எதிர்காலத்திலும் மலையகம் தழுவிய சகல மக்களின் அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துவேன். ஆகவே, அரசியல் ரீதீயாகவும் மாகாண ரீதியாகவும் இன ரீதியாக பிரிந்து நிற்பதை விடுத்து இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X