2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘இந்திய பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்க முடியாது’

Princiya Dixci   / 2017 ஜனவரி 19 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவை பிராந்திய வல்லரசுகளில் ஒன்றாகவும், வல்லரசாக வரக்கூடிய நாடாகவும் அங்கிகரித்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இந்திய பாதுகாப்பு மற்றும் அதன் பூகோள அறிவியல் என்பவற்றை ஆபத்துக்கு உள்ளாக்க முடியாதென்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், ஏ.என்.ஐ செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில்,

“பாதுகாப்புப் பிரச்சினை என வரும்போது, இந்தியா இப்பகுதியில் ஒரு பிராந்திய சக்தியாகும். இந்தியாவின் பாதுகாப்பு விசனங்கள் மற்றும் உணர்வுகள் ஆபத்துக்கு உள்ளாக முடியாது. எனவே, இலங்கை வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்யும்போது இந்தியாவை இக்கட்டான நிலைமைக்கு தள்ளக்கூடாது” என அவர் ஏ.என்.ஐ க்கு கூறினர். 

விடுதலை புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்த பொன்சேகா, இந்து சமுத்திரத்தை சூழவுள்ள பகுதிகளையை ,பூகோள அரசியலில் இந்தியாவின் பாத்திரத்தை வலியுறுத்தினர். இந்தியா தனது பாதுகாப்பையிட்டு மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக, ஏனைய சக்திமிக்க நாடுகள் தெரிந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார். 

எப்படியும் இந்தியா ஒரு பிராந்திய சக்தியும், வல்லரசாக வரக்கூடிய நாடும் ஆகும். எனவே இந்த பகுதிக்குள் வர விரும்பும் சக்திமிக்க நாடுகளில் இந்தியா தனது பாதுகாப்பு பற்றி கொண்டுள்ள விசனத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென பொன்சேகா கூறினார். 

“ஹம்பாந்தோட்டை செயற்றிட்டம் கையாளப்பட்ட விதத்தை பொன்சேகா விமர்சித்தார். பெருமளவில் காணப்பட்ட ஊழல்கள் காரணமாக இத்திட்டம் நாட்டுக்கு நலன் அளிப்பதாக இல்லை. இது ஒரு தேசிய நெருக்கடி” என அவர் கூறினார். 

“எமது நாட்டின் சார்பில் நினைவுடன் பேசுவோர் நேர்மையாக செயற்படவில்லை, ஏராளமான பணம் சுருட்டப்பட்டுள்ளது. இதனால் இது, இலங்கைக்கு ஒரு தேசிய நெருக்கடியாகிவிட்டது என அவர் கூறினார்.  வேறு நாடுகளுடனான, இலங்கையின் உறவுகள் பற்றி கருத்துத் தெரிவித்த போது ‘நாம் சகல நாடுகளுடனும் நட்பை விரும்புகிறோம். நாம் ஒரு சிறிய நாடு, பெரிய நாடுகள் எமது நிலைமையை விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.  

இந்திய இலங்கை உறவு எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக அமையுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன்படி நாடுகளுக்கிடையில் அரசியல் ரீதியான விளக்கம் உள்ளதென அவர் கூறினார்.  

எவ்வகையிலும் பூகோள நலனை நாம் ஆபத்துக்கு உள்ளாக்கக் கூடாதென்பதை நாம் தெரிந்துள்ளோம். எமது நாடுகளிடையே பிரச்சினை ஏதும் வரக் காரணமில்லை என அவர் கூறினார்.  

புதுடெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் இரண்டாவது றைசினா (Raisina) உரையாடலில், கலந்துக்கொள்ள பொன்சேகா, செவ்வாய்கிழமை இந்தியாவுக்கு வந்தார்.   

இலங்கையிலும் இந்து சமுத்திரத்திலும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பிலான விசனங்களையும் பயத்தையும் நீக்கும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .