Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 27 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலக்கரி மின்நிலையமொன்றை சம்பூரில் அமைக்கும் திட்டம் தொடர்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
500 மெகாவொட் சக்தியைப் பிறப்பிக்கும் இந்த நிலக்கரி மின்நிலையத்தை சம்பூரில் அமைப்பது தொடர்பாக, திருகோணமலை மக்களும் கிழக்கின் ஏனைய மக்களும், எதிர்ப்பினை வெளியிட்டு வருவதை, அவர் சுட்டிக்காட்டினார்.
'ஏற்படக்கூடிய கணிசமானளவு மாசடைவு தொடர்பாகவும் சூழல் பாதிப்புகள் தொடர்பாகவும், அந்தப் பகுதி மக்கள், என்னிடம் தெரிவித்து வருவதோடு, அது தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென, என்னைப் பார்த்துக் குற்றஞ்சாட்டுகின்றனர். நிலக்கரி மின்நிலையத்துக்குப் பதிலாக, சூரியக்கல மின்நிலையமொன்றை உருவாக்குவதே, எனது மனதில் காணப்படுகிறது' என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானிகள் ஒன்றியமொன்றின் கருத்துகளைச் சுட்டிக்காட்டும் இலங்கையின் சூழலியலாளர்கள், 500 மெகாவொட் நிலக்கரி மின்நிலையத்தின் மூலமாக, ஆண்டுதோறும் 10,000 தொன் சல்பர் டைஒக்சைட் (அமில மழைக்கான பிரதான காரணி), 10,200 தொன் நைதரசன் ஒக்சைட் (பனிப்புகையை ஏற்படுத்துவது), 3.7 மில்லியன் தொன் காபனீரொக்சைட் (காலநிலை மாற்றத்துக்கான முக்கியமான காரணி), நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் சிறிய துகள்கள் 500 தொன், காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் காபனோரொக்சைட் 720 தொன், கடலுள் செலுத்தப்படுவதன் காரணமாக கடலுயிரினங்களை அழிக்கவும் பவளக்கற்பாறைகளைப் பாதிக்கவும்கூடிய 2.2 தொன் சூடான நீர் ஆகியவை வெளியேறும் எனத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago