2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘5,000 இல்லையெனில் போராட்டம் இல்லை’

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் 5,000 ரூபாய் நாணயத்தாள் இரத்துச் செய்யப்படும் பட்சத்தில், ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 “கடந்த ஆட்சி காலத்தில் கொள்ளையிடப்பட்ட அரச சொத்துக்களின் மூலம் சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தைக் கொண்டே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .