2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

12 உ/த பரீட்சார்த்திகள் விசாரணைக்கு அழைப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள், விசாரணைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்” என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.  

பரீட்சார்த்திகளிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  

2016ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் பெறுபேறுகளில், 92 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  

இதில், விடைத்தாள்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், 12 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டன.  

ஏனைய 80 பரீட்சார்த்திகளும் தாங்கள், சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாவட்டங்களை தவிர்த்து, பின்தங்கிய மாவட்டங்களுக்குச் சென்று, பரீட்சைக்கு தோற்றியவர்கள் என்று தெரிவித்த ஆணையாளர், அந்தப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் முற்றுமுழுதாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.  

இந்த 80 பரீட்சார்த்திகளும் வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகளிலிருந்து பரீட்சைக்கு தோற்றியமை விசாரணைகளின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .