2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ஐ.தே.க வின் நிலைப்பாடு மாறாது’

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றுவது என்ற நிலைப்பாட்டை, ஐக்கிய தேசியக்கட்சி மாற்றாது” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பி நலின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.  

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“தற்போதுள்ள அரசியலமைப்பு, காலாவதியாகிவிட்டது என்று கட்சி எண்ணுகின்றது. அதனால், தற்போது உள்ள தேவைக்கேற்ப, இந்த அரசியலமைப்பு மாற்றப்படுதல் வேண்டும்” என்று அவர் கூறினார்.   

ஜனாதிபதி முறைமையை கைவிடுதல் அல்லது புதிய அரசியலமைப்பு போன்றவை தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்காது, ஜனாதிபதி தேர்தல் குறித்து கதைப்பது, தேவையற்ற விடயமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது, யாருக்கும் தெரியாமல் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை, தேர்தலுக்கு முன்னிறுத்தியதைப்போன்று, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போதும், அதேபோன்றே, ஐ.தே.க செயற்படும் என்று தெரிவித்துள்ள அவர், அரசியலமைப்பு மாற்றத்துக்கும் அதேநிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .