2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘400 குழாய் கிணறுகள் வருகின்றன“

Kogilavani   / 2017 ஜனவரி 19 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

தற்போது நிலவும் வரட்சிக்கு முகங்கொடுக்கும் முகமாக மிகவும் ஆழமான 400 குழாய் கிணறுகளைப் புதிதாக அமைப்பதற்கும் நாடளாவிய ரீதியிலுள்ள 1,000 கிணறுகளைப் புனரமைப்பதற்கும், கையினால் இயக்கக் கூடிய 200 கிணறுகளைப் பின்தங்கிய கிராமங்களில் நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே, இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினால் கிராமியப் பிரதேசங்களில் சிறிய நீர் வழங்கல் பிரிவு மிக மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலேயே புதிய குழாய் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித் சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, வரட்சிக்கு முகங்கொடுக்கும் வகையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பவுசர் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற நீர் வழங்கல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக,
அச்சபை தெரிவித்தது.

அத்துடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்துவதற்கும், நீர் வழங்கல், அவசரமாகக் குறையும் சந்தர்ப்பங்களில் தேவையான துரித நடவடிக்கைகளை எடுப்பதற்காக உரிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .