2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கட்டளைகள் அமுலாகும் திகதியை குறிப்பிடவும்

Niroshini   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக, முச்சக்கரவண்டிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டளைகள் செயற்படுத்தப்படும் திகதியைக் குறிப்பிடுமாறு நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் கோரியுள்ளது.   

அந்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகள், எப்பொழுது இருந்து அமுல்படுத்தப்படும் என்று திகதியிடப்படவில்லை என்றும் அவ்வியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.   
இந்த விவகாரம் தொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, முச்சக்கரவண்டியில் பயணிப்போருக்கு, கட்டாயமாக ரசீதுகள் விநியோகிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

எனினும், சந்தையில் தற்போது, விற்பனை செய்யப்படுகின்ற மீற்றர்களின் மூலமாக, இந்த விடயம் சாத்தியப்படாது. ஆகையால், அவ்வாறான மீற்றர்களை விற்பனை செய்வதை முதலில் நிறுத்தவும் அதன் பின்னர், ஏனைய விடயங்களை அமுல்படுத்துவதை பற்றி அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .