Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனனி ஞானசேகரன்
“போதைபொருள் விற்பனையில் பெற்றுக்கொள்ளுகின்ற இலாபத்தை விட அதிகமான இலாபத்தை சைட்டம் (மருத்துவ மற்றும் தொழிநுட்ப கற்கைகளுக்கான தெற்காசிய நிறுவனம்) நிறுவனம் ஆண்டொன்றுக்குப் பெற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு கல்வியை விற்பனை செய்யும் சைட்டம் நிறுவனம் இலங்கைக்கு தேவையில்லை” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாலபேயிலுள்ள சைட்டம் நிறுவனத்தை சட்டரீதியாக ஏற்றுகொள்ளுகின்ற விடயம் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சபையில், நேற்று (17) இடம்பெற்றது. அதுதொடர்பில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“2011ஆம் ஆண்டு சைட்டம் நிறுவனம் 372 மில்லியன் ரூபாயை இலாபமாகப் பெற்றது. பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து, 2014 ஆம் ஆண்டு 1,265 மில்லியன் ரூபாயை இலபமாகப் பெற்றது. இது எவ்வாறு முடியும். கல்வியை ஊழல் முறையில் விற்பனை செய்யும் சைட்டம் எங்களுக்கு வேண்டாம்.
மேலும், சைட்டம் நிறுவனம் ஆரம்பிக்கும் போது, இந்நிறுனத்தில் கல்விகற்று வெளியேறும் மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டு நிறுவனத்துடன் இணைந்து, பட்டம் வழங்குவதாகக் கூறினர். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் குறிப்பட்ட எந்த ஒரு விடயமும் நடைமுறைப்படுத்தவில்லை.
சைட்டம் நிறுவனம் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையில் மிக மோசமான ஊழல் முறையிலேயே இயங்கிவருகிறது என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில், எமது நாட்டில் வைத்தியராகக் கடைமையாற்றுவதற்காகப் பதிவுசெய்யும் அதிகாரம், இலங்கை மருத்துவ சபைக்கு மாத்திரம் காணப்படுகிறது.
நாங்கள், இலங்கை மருத்துவ சபையின் தலைவர் உட்பட அந்தச் சபையிடம் கலந்துரையாடினோம். விசேடமாக மருத்துவ சபை, இந்த சைட்டம் நிறுவனத்தில் கல்விகற்கும் மாணவர்களை வைத்தியாராக ஏற்றுக்கொள்ள முடியாது என மிக தெளிவாகச் சுட்டிக்காட்டியது என்றார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago