2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘சண்டைக் கட்சியாக மாறிவிட்டது மு.கா’

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சமூகக்கட்சி என்ற நிலையில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, சண்டைக் கட்சியாக மாறிவிட்டது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார்.

தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“சட்டியோடு புலால் நாற்றம் போய்விட்டதென்று, கிராமத்துப் பழமொழியொன்று உண்டு. அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸஸும், மர்ஹூம் அஷ்ரபின் மறைவோடு முடிந்து விட்டது. அந்தக் கட்சிக்குள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகள், பல்வேறு நெருக்கடிகள் தலைவிரித்தாடுகின்றன. தலைவரில் பிரச்சினை, செயலாளரில் பிரச்சினை, தவிசாளரில் பிரச்சினை - அடிதடி நடக்குமளவுக்கு, பிரச்சினைகள் பூதாகரமாகக் கிளம்பியிருக்கின்றன.

"மர்ஹூம் அஷ்ரபோடு இணைந்து அந்தக் கட்சியை நாங்கள் தூக்கிப்பிடித்தவர்கள். தற்போது சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு, அவர்களுக்கு நேரமில்லாத நிலை வந்துவிட்டது.

"முஸ்லிம்களின் நலன்காக்கும் சங்கமெனக் கருதப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், கடந்த காலங்களில் நமது பிரச்சினைகளை தீர்க்கத் தவறிவிட்டது. அவர்கள், அந்தப் பிரச்சினைகளை தீர்க்கம் தயாராகவுமில்லை. அவர்களுடைய கவனமும் கரிசனையும், தங்களை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றது. 'நாரே தக்பீர்' என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பின்னர், 'ஆதவன் எழுந்து வரப் போகின்றான்' என்று கூறியபோது, அவர்களை நம்பினோம், ஏமாந்தோம்.

"இந்த நிலைவரத்தை மாற்றுவதற்காகவே, கட்சியை நாங்கள் உருவாக்கினோம். எமது தலைமை, நீங்கள் எதிர்பார்ப்பதைவிட ஒருபடி மேலே சென்று ஓடோடி உதவி செய்து வருகின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X