2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஜி.எல்.பி பிளஸூக்காக கலாசாரத்தை பலியிட முடியாது'

Kanagaraj   / 2017 ஜனவரி 17 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஜி.எல்.பி பிளஸ் சலுகை, நாட்டுக்கு தேவையானதாகும் எனினும், அந்தச் சலுகையை பெற்றுக்கொள்வதற்காக, கலாசாரத்தைப் பலிகொடுக்கமுடியாது' என்று பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'நாட்டின் கலாசாரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில், உள்ளடக்கப்பட்டுள்ள உறுப்புரைகளை நீக்கிவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பிலான செயற்பாட்டுத் திட்டத்தை கண்காணிப்பதற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'மனித உரிமைகள் மீறல் தொடர்பில், நாட்டின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இல்லாதொழித்தே, ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதனைவிடுத்து, வேறெந்த தேவைகளுக்காகவும், நாட்டையும் நாட்டின் கலாசாரத்தையும் சீரழிக்கும் உறுப்புரைகளுக்கு தலையை சாய்த்து அந்த சலுகையை நாம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கவில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .