2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘திராணியிருந்தால் நேரில் பேசட்டும்’ ஹக்கீம் சவால்

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கட்சிக்குள் இருப்பவர்களையும் கட்சியையும் வெளியில் விமர்சிக்கும் எவராக இருந்தாலும், கட்சிப் பொதுக் கூட்டத்தில் நேரடியாகக் கேட்கும் சக்தியிருந்தால் கேட்கட்டும். அதற்குப் பதில்கூற நாம் தயாராகவிருக்கிறோம்’ என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையையும் அவரோடு சம்பந்தப்பட்டவர்களையும் வசைபாடும் படலம் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடங்களிலிலும் முஸ்லிம் காங்கிரஸை விமர்சித்துத் திரிபவர்கள், கட்சி உயர்பீடத்தில் நேரடியாகக் கேள்விகளைக் கேட்கமுடியும். அப்படி அவர்கள் கேள்வி கேட்டால் அதற்குப் பதில்கூற கட்சியின் உயர்பீடம் தயாராகவிருக்கிறது. அதைவிடுத்து, வெளியில் வீரங்காட்டித் திரிபவர்களெல்லாம் கட்சியின் விசுவாசிகள் எனக் கூறமுடியாது” எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .