2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'நிதி ஒதுக்கீடுகளில் கல்வியமைச்சு தலையிட வேண்டும்'

Niroshini   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளில் முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு கல்வியமைச்சு தலையிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் பொன்விழா நேற்று முற்பகல் நடைபெற்றது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்நது கருத்துத் தெரிவிக்கையில்,

கல்விக்காக பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட போதிலும் பாடசாலைகளில் நிலவும் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாதிருப்பது பாரதூரமான பிரச்சினையாகும். நிதியொதுக்கீடுகளை செலவிடவேண்டிய முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு கல்வி அமைச்சு தலையீடு செய்யவேண்டும்.

கடந்த ஆண்டின் மாகாண சபைகளுக்கான நிதி தேவைக்கு அதிகமானது என்பதனால் அதனை வேறு விடயங்களுக்கு மாற்றுவதற்கு சில மாகாண கல்வி அமைச்சர்கள் கேட்கின்றனர். அந்தளவுக்கு நிதி கிடைத்திருந்தும் பெரும்பாலான மாகாண பாடசாலைகளில் கழிவறைகள், தளபாட தேவைகள்  முழுமைப்படுத்தப்படவில்லை என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X