2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘நியமனங்களில் தலையிடேன்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுகளில் ஏற்படுகின்ற பதவி வெற்றிடங்கள் தொடர்பில் எந்தவோர் அமைச்சரோடோ அல்லது அமைச்சுடனோ, தொலைபேசியில் கூட, தான் தொடர்பு கொள்வதில்லையெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சு நியமனங்கள் எதிலும், தான் ஒரு போதும் தலையிடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பல் மருத்துவமனையின் (போதனா) முதற் கட்டமான புதிய கட்டடத் தொகுதி திறந்து வைத்தல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சுகாதார அமைச்சராக தான் இருந்த வேளையில் கூட, வைத்தியர் அல்லது தாதியர் இடமாற்றம் தொடர்பில் கூட யாருக்கும் பணிக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

“அந்தந்தத் திணைக்களங்களின் தலைவர்கள் இந்த விடயங்களை பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கும் எனக்கும் தொடர்பில்லை என நானே கூறினேன்” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். 

தமது அமைச்சுகள் வழங்கும் சேவைகளை சுமூகமாக செய்ய அமைச்சர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென தான் நம்புவதாக ஜனாதிபதி கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “வேகமாக பரவிவரும் டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாக, புதிய செயற்றிட்டமொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். 

உயிர்க்கொல்லி டெங்கு நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயற்றட்டம் வெற்றிபெறுவதற்கு, நாட்டு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.  

சுகாதார அமைச்சராக தான் இருந்தபோது சுகாதார துறையின் உயர்வுக்காக மேற்கொள்ள முற்பட்ட சில திட்டங்களை அமுல்படுத்துவதற்கு இடமளிக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .