2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

14 நாளுக்கு 14 நாள் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

Kanagaraj   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசடியான முறைகளில் பணத்தைத் திரட்டி, பணச்சலவையின் ஊடாக வெள்ளைப்பணமாக மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமார உள்ளிட்ட எட்டுப் பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த எட்டுப்பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதான நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு, ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது என்பதனால் அதுவரையிலும் அவ்வணைவரையும் 14 நாட்களுக்கு ஒருதடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விளக்கமறியலை நீடித்துக்கொள்ளுமாறும், சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவுக்கு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .