2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'நல்லாட்சியால் அதிர்ச்சியடைந்த சர்வதேச நாடாளுமன்றம்'

Gavitha   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஆட்சியில் உள்ள தேசிய அரசாங்கத்தால், தாங்கள் எதிர்நோக்கியுள்ள தொந்தரவுகள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் ஜெனீவா நகருக்குச் சென்று சர்வதேச நாடாளுமன்றத்தின் சங்கத்திடம் தெரிவித்ததும், அதன் பொதுச் செயலாளர் அதிர்ச்சியடைந்ததாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக, மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச நாடாளுமன்றத்தில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அமைப்புக்களின் ஊடாக, இந்த அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என்று தெரிவித்த கம்மன்பில, சர்வதேச நாடாளுமன்றத்தின் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .