2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

2 புகையிலை கிடங்குகளை மூட தீர்மானம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், சீகிரிய ஆகிய பிரதேங்களில் உள்ள புகையிலைக் கிடங்குகள் இரண்டையும் மூடிவிடுவதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் அறிவித்துள்ளது.  

இது தொடர்பில் அந்த நிறுவனம், நேற்று (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்தமையால் புகையிலைக் கிடங்குகளில் நான்கு கிடங்குகளை மூடவேண்டிய நிலைமை ஏற்படுமென எமது நிறுவனம், 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அறிவித்திருந்தது.   இதன் முதலாவது கட்டமாக அனுராதபுரம் மற்றும் சீகிரிய ஆகிய பிரதேசங்களில் உள்ள புகையிலை கிடங்குகளில் இரண்டை மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இவ்விரு கிடங்குகளையும் மூடுவதனால், புகையிலை பயிர்செய்கையில் ஈடுபடுகின்ற சுமார் 2,000 பேருக்கு தங்களுடைய வாழ்வாதார வழி, இல்லாமற் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .