Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
“புனர்வாழ்வு பெற்ற, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் பலர், கொழும்பில் வாழ்கின்றனர். அவ்வாறானவர்களால் பெரும் ஆபத்து வரக்கூடும்” என்று, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென்றால், பலமுறை யோசித்து, நிதானித்தே ஆர்ப்பாட்டங்களை நடத்தவேண்டியுள்ளது. ஏனெனில், கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை பிரயோகத்துடன் ஏதோ ஒரு வகையில், அசீட்டை கலந்து வீசிவிட்டால்,பொறுப்புக் கூறுவதற்கு யாரும் வரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை. சி.வி, எவ்வாறு தமிழ் இனவாதியாக செயற்படுகிறாரோ அதேபோல் ரணிலும் தமிழ் இனவாதியாகவே செயற்படுகிறார்” என, தெரிவித்தார்.
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு படித்த தமிழ் இனவாதியாவார். அவருக்கும், சி.விக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. வட மாகாணத்தில் எந்த அரச திணைக்களங்கமும் இல்லை. மத்திய அரசாங்கத்தின் தலையீடும் அங்கு செல்லுப்படியாகாது. அங்கு தனியானதொரு ராஜ்ஜியம் செயற்படுகின்றது. இதுதான் இவர்கள் கூறிய நல்லாட்சியா” என்றும் வினவினார்.
“கொழும்பை கேந்திரமாகக்கொண்ட, சிங்கள வியாபாரிகளின் சொத்துகளும் பொதுமக்களின் பணமும் உள்ளடக்கிய வகையில், எந்தவித பிழையுமின்றி மிகக் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவமே, இந்த பிணைமுறி விவகாரமாகும். சிறிய சிறிய குற்றங்களுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் பெற்றுக்கொடுக்கும் இந்த நாடு, இந்த பிணைமுறி விவகாரம் பூதாகரமான பிரச்சினையா இருப்பதால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
மேலும், அர்ஜுன் அலோசியஸ், பிரபல ஊடகமொன்றை விலைக்கொடுத்து வாங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, அந்த பிரபலாமான ஊடக நிறுவனம் எது என்பதை மக்களுக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
“இதேவேளை, வியாபாரிகளை அரசாங்கத்துக்கு செலுத்திவரும் வரிகளை இனிமேல் செலுத்த வேண்டாமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். வியாபாரிகளிடமிருந்து சொத்துகள் அனைத்தையும் அரசாங்கம் சூறையாடிவிட்டதால், வரியை ஏன்? செலுத்தவேண்டும்” என்றும் வினவினார்.
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025