2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘பதவிக்காகவே யாப்பை மாற்றினார்’

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ உண்மையிலேயே ஓய்வுபெறத் தீர்மானித்து இருந்தால், தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காக அரசியலமைப்பை மாற்றம் செய்திருக்கத் தேவையில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“நாட்டை மாற்றும் ரணிலுடன் ஒன்றுபடுவோம்” எனும் கருப்பொருளில் கூட்டமொன்று, அநுராதபுரத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்றது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நுகேகொடையில் வௌ்ளிக்கிழமை (27) இடம்பெற்ற  கூட்டத்தில், “ஓய்வுபெற இருந்த என்னை, ஜனாதிபதி மைத்திரிதான் மீண்டும் அரசியலுக்கு இழுத்தார்” எனத் தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரமதர் இவ்வாறு தெரிவித்ததுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வராதிருந்தால், அவர் ஓய்வுபெறவிருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஐ.தே.கவின் ஜனாதிபதிகளும் ஸ்ரீ ல.சு.கவின் ஜனாதிபதிகளும், இரு முறை ஜனாதிபதியாக இருந்துவிட்டு, ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர்.

"மஹிந்த ராஜபக்‌ஷ மாத்திரம், அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை இரு வாரங்களுக்குள் கொண்டுவந்து, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மாற்றினார்?

"அரசியலிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ உண்மையிலேயே ஓய்வுபெறத் தீர்மானித்து இருந்தால், தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காக அரசியலமைப்பை மாற்றம் செய்திருக்கத் தேவையில்லை” என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .