2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'பழைய வெடிபொருட்கள் இல்லை'

Thipaan   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரியில் அண்மையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை சிறிது ஆபத்தான செய்தி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்விடத்தில் மேற்கொண்ட சோதனையையடுத்தே வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை பழைய வெடிபொருட்களாக இருக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

பேராதனையிலுள்ள கெட்டம்பே ராஜோபவநாரம விகாரையின் விகாராதிபதியான வண. கெப்பட்டியாகொட சிறிவிமல தேரருடடான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலனாய்வாளர்கள் தங்களது சேவைகளை ஒழுங்காக செய்யவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், நாடு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள சமயத்தில், அரைவாசிக்கும் மேற்பட்ட சிரேஷ்ட புலனாய்வாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, கனிஷ்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பான விடயங்களைக் கண்டுபிடிக்க சிரமப்படுவதாகவும் இது ஆபத்தான நிலைமை எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .