Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 16 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகப்பூர்வமான விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல், கடமைக்கு வராமல் இருக்கும் 42,000 முப்படையினரை கைது செய்யுமாறு, பொலிஸாரிடமும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமும், இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளதாக, இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ண நேற்று தெரிவித்தார்.
இவர்களுள் 34,000 இராணுவ வீரர்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வமான விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல், கடமைக்கு வராமல் இருக்கும் முப்படையினருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்திலும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாத 42,000 பேரே கைது செய்யப்படவுள்ளதாகவும், முப்படையினரும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில், பொலிஸார் அவர்களை கைது செய்வர் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான அதிகாரம், இராணுவத்தினரிடம் இல்லாமையினாலேயே, பொலிஸாருக்கு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவர்களை கைது செய்வதற்கான பல்வேறு செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும் என்றும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், அவர்கள் சேவைக்காலத்திலிருந்து நீக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago