Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள எந்தவோர் அரசியல் மாற்றத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை' என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கெகுனுகொல்ல, மடலஸ்ஸ, அல் இக்ரா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்து அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறு த.தே.கூ உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 50 வருடங்களாக ஜனநாயக ரீதியிலும் முப்பது வருடங்களாக ஆயுதம் தாங்கியும், தமது உரிமைகளுக்காக போராடிய மக்களின் உரிமைக் கோரிக்கைக்கு, செவிசாய்க்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம், அரசியலமைப்புச் சபை ஒன்றை உருவாக்கி, யாப்பைத் திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
பெரும்பான்மைக் காட்சிகளில் ஒன்றான சு.க, தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென விடாப்பிடியாக நிற்கின்றது. தனித்து ஆட்சியமைக்க இதுவே சிறந்த வழி என்ற, ஆழ்மனது சிந்தனையுடன் அந்தக் கட்சி தேர்தல் முறைமையில் மாற்றம் வரவேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றது.
ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து, பிரதமரின் அதிகாரத்தை அதிகரிக்கக் கூடிய வகையில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஒன்றுக்காக ஐ.தே.க வரிந்துகட்டிக் கொண்டு நிற்கின்றது.
இந்த மூன்று கட்சிகளின் கோரிக்கைகளுக்கும் மத்தியிலே, முஸ்லிம் சமூகம், என்ன செய்வது? என்று தெரியாது திக்கித்திணறி நிற்கின்றது' என்று அவர் கூறினார்.
' கடந்த ஆட்சியின் துணையுடன், இனவாதிகளின் கொடூரத்தை தாங்க முடியாததன் காரணத்தினாலேயே, ஆட்சி மாற்றத்தை விரும்பினோம். இந்த ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பங்களித்தவர்கள் நாங்கள்.
எனினும், புதிய தேர்தல் முறை மாற்றங்கள் எமது பிரதிநிதித்துவை பாதிக்கும் என்று நாம் அஞ்சுகின்றோம். புதிய மாற்றங்களினால் நமது சமூகம் அள்ளுண்டுபோகக் கூடிய ஆபத்தே பெருமளவு காணப்படுகின்றது.
அரசியல் கட்சியொன்றின் தலைவனாக இருப்பதனால்தான் அரசியலமைப்புச் சபையில் என்னால் அங்கம் வகிக்க முடிகின்றது. அதேபோன்றுதான் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் அங்கம் வகிக்கின்றார். அநியாயம் நடந்தால் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்' என்றும் அவர் கூறினார்.
41 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
9 hours ago
15 Aug 2025