2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘மகனைக் கொன்றோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கவும்’

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொட் ஆஸிக்

“எமது மகனின் கொலையுடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று, கட்டுகஸ்தோட்ட இளைஞனின் பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர்.   

கட்டுகஸ்தோட்டை, செனரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தக்க கெலும் அலுகொல்ல என்ற 32 வயது இளைஞன், இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில், இளைஞனின் சடலம், கண்டி - கொழும்பு வீதி, பஸ்யாலையிலிருந்து வௌ்ளிக்கிழமை (10) மீட்கப்பட்டது.   

இந்த விவகாரம் தொடர்பில் இளைஞனின் பெற்றோர் தெரிவிக்கையில், “எங்களது மகன், எவருக்கும் எவ்வித இன்னல்களையும் கொடுத்ததில்லை. அவர் அமைதியானவர். தொழில் நிமித்தமே பஸ்யாலை பிரதேசத்துக்கு சென்றார். அவர் தொழிலுக்குச் சேர்ந்து, இரண்டு மாதங்களே ஆகின்றன.   

எனது மகன், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும், உச்சக்கட்டத் தண்டனையை வழங்க வேணடும்” என்றும் கேட்டுக் கொண்டார்.   

பஸ்யாலையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த இவர், வீட்டுக்கு செல்வதாகக் கூறி கடந்த 9ஆம் திகதி இரவு பஸ்யாலையிலிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையிலே காணாமல் போனார். எனினும், அவர், வரக்காபொலையிலிருந்து மறுநாள் வௌ்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X