2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'மரண பரிசோதனைக்கு உட்படுத்தாமை ஏன்?'

Thipaan   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலஞ்சென்ற கோட்டை மாதுலுவாவே சோபித்த தேரரின் மரணச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் மரண பரிசோதனையை நடத்தாமை தொடர்பில், நிபுணர்கள் கொண்ட வைத்தியக் குழுவினால் விசாரணைகளை நடத்தி, நீதிமன்றத்துக்கு அறிக்கையிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய  உத்தரவிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவுக்கு பிரதான நீதவான், நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

மாதுலுவாவே சோபித்த தேரருக்கு சிங்கபூர் மௌவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அளிக்கப்பட்ட வைத்திய சிகிச்சை, அந்த வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மரணச்சான்றிதழ், அதற்கு முன்னர் தேரர் பயன்படுத்திய மருத்துகள், அவருக்கு இருந்த நோய்கள் தொடர்பில் ஒப்பிட்டு பார்த்து, பிரபல வைத்தியக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென, நீதிமன்றத்தின் கவனத்துக்கு இரகசிய பொலிஸார் கொண்டுவந்ததையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .