2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'றோ உளவாளியல்லர்':இந்தியா மறுப்பு

Gavitha   / 2016 மார்ச் 31 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் வைத்து, இந்திய உளவாளியொருவர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறியதை இந்தியா மறுத்துள்ளது.

உளவு நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டதாக ஒருவர் கூறுவதைக் காட்டும் காணொளியை, பாகிஸ்தானிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.

'பாகிஸ்தானில் இந்தியாவின் தலையீட்டுக்கு, இதைவிடக் கூடுதலான ஆதாரம் இருக்க முடியாது' என, பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மனிதர், இந்தியப் பிரஜையே எனக் கூறிய டெல்லி, உளவு பார்த்ததாகக் கூறப்பட்டதை நிராகரித்ததுடன், இவர், சொல்லிக் கொடுக்கப்பட்டதையே கூறுகிறார் என்றும் கூறியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான விகாஸ் சுஹப், 'கைது செய்யப்பட்டவரின் நலனையிட்டு, நாம் விசனமடைந்துள்ளோம்' என்றார்.

சர்வதேச நடைமுறைக்கு மாறாக, இந்தியப் பிரஜையை சந்திக்க வாய்ப்புக் கேட்டபோது மறுக்கப்பட்டுள்ளது என சுஹப் கூறினார்.

குறித்தநபர், இந்திய கடற்படை அதிகாரியாக இருந்தவர் எனவும் பலூசிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட முயற்சிக்கிறார் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர். 'இவ்வாறான உயர் பதவி வகிக்கும் ஆயுதப்படை அதிகாரியொருவர், பிறிதொரு நாட்டில் கைதுசெய்யப்பட்டால், அது பெரும் சாதனையாகும்' என, பாகிஸ்தானைச் சேர்ந்த லெப்டின்ட் ஜெனரல் பஜ்வா கூறினார்.

இந்தியக் கடற்படையில் கடமைபுரியும் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரியொருவரை, பலூசிஸ்தான் பாதுகாப்பு படை கைதுசெய்துள்ளது என்று கடந்த 29ஆம் திகதியன்று பாகிஸ்தான் செய்திவெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .