Kogilavani / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று பிரதேசங்களில் நேற்று (09) இடம்பெற்ற கோரமான விபத்துகள் நான்கில், நால்வர் பலியானதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். அத்துடன், மூன்று சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி, கித்துல்ஹிடியாவ எனுமிடத்தில், வீதியைக் கடக்க முயன்ற அதே பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய எஸ்.சில்வா என்பவர் மீது மோதியதில், அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
நேற்றுக்காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பதுரலிய, பொல்லுன்ன வீதியில், வானொன்றும் அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேற்றுக்காலை 6:20 மணிக்கு நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்தச் சம்பவத்தில், மோட்டார் சைக்கிளின் சாரதியான ஹடிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நந்தன திலாக் குமார (வயது 42) என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து, வானின் சாதியைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பு- கண்டி பிரதான வீதியில், நிட்டம்புவ கொன்கஸ்தெனிய எனுமிடத்தில், லொறியொன்றும் அதன் எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியும் நேற்று (09) அதிகாலை 2:45 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியாகினர். மற்றுமொருவர் காயமடைந்தார்.
கொருலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான, 27 வயதான, வீ.இசுறு இந்திக என்பவரும், பபுலுகம, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த எதிரிசூரிய ஆராச்சிலாகே மல்சா மதுவந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் மூவரை ஏற்றிக்கொண்டு, கொழும்பிலிருந்து சிகிரியவுக்குப் பயணித்த வானொன்று, கொக்கரல்ல- ஓமராகொல்ல பகுதியில் வைத்து, நேற்றுப் பிற்பகல் 12:10 மணிக்கு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதில், சாதி உள்ளிட்ட நால்வரும் காயமடைந்தனர். அவர்கள், கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்துக்குள்ளான அந்த வான், தீப்பற்றி எரிந்துவிட்டதாகவும் அறியமுடிகின்றது.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago