2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘வாயை மூடிவிட முயற்சி

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்களை மூடிவிட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான தமது செயற்பாடுகளை எவ்விதமான இடையூறுகளும் இன்றி முன்னெடுப்பதற்கான,

அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பிரசன்ன ரணதுங்க (எம்.பி) தெரிவித்தார்.  

அதற்காக, தான் உட்பட இன்னும் பல எம்.பிக்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு, அரசாங்கம் திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் ஆணையை நிர்மாணிக்கின்ற, அதுவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதிப்படுத்தினால் நல்லது என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துரையாடியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

தான் உட்பட இன்னும் சிலரைக் கைதுசெய்து, விளக்கமறியலில் வைப்பதற்காக எங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .