2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

“வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும்”

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

வெளிநாடுகளிலில் இருந்து, அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச முதலாளிமார்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில்,  கொட்டகலை சீ.எல்.எப் தொழில் பயிற்சி நிலையத்துக்கு  நேற்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொட்டகலை பிரதேச வர்த்தகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

அரசாங்கத்தினால், அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளப் போதிலும் தம்மால் குறித்த விலைக்கு, அரிசியை விற்பனை செய்யமுடியாதுள்ளதாக, வர்த்தகர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றனர்.

அரிசி உற்பத்தியாளர்களிடமிருந்து, அதிக விலைக் கொடுத்தே அரிசியை கொள்வனவு செய்வதாகவும் நிர்ணய விலைக்கு, சில்லறை வியாபாரம் செய்யமுடியாமல் உள்ளதாகவும்  வர்த்தகர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பொதுமக்களின் நலன் கருதி, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதுடன், நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X