2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘வெளிவிவகார அமைச்சை கையிலெடுத்தால் சாதகமாக பயன்படுத்தலாம்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானங்களை இலங்கைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமாயின், தற்போதைய அரசாங்கத்தில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுப் பதவியை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனது கையில் எடுக்கவேண்டும் என்று, இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானங்களை இலங்கைக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். எனினும், தற்போதைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் அவ்வாறானதொரு நிலைமை தெரியவில்லை.  

டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானங்களை வைத்து பார்க்கின்ற போது, இலங்கைக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.  

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் ஆகிய இருவரும் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .