Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாவகச்சேரி மறவன்புலவு, பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் அறையிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்,13 வயதிலேயே இணைந்துகொண்டார் என்று, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் வைத்தே, இவர் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர், ரமேஷ் என்றழைக்கப்படும் 32 வயதான எட்வட் ஜூலின் என்று இனங்காணப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி பொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை, மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் அச்சந்தேகநபர், பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, மேற்படி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு பணித்துள்ளார். இதனையடுத்தே அது தொடர்பிலான விசாரணைகள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ், மா அதிபர் தலைமையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர், புலிகள் அமைப்பில் சுமார் 10 வருடங்கள் மட்டுமே இருந்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
1982ஆம் ஆண்டு பிறந்த எட்வட் ஜூலின், இறுதி யுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று அறியமுடிகின்றது. இறுதி யுத்ததத்தின் போது, புலிகள் அமைப்பிலிருந்து தப்பி வவுனியா பிரதேசத்துக்கு வந்துள்ளார்.
யுத்தம் நிறைவடையும் வரையிலும் அவர், கூலி வேலையே அங்கு செய்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அவர், பாதுகாப்புப் படையிடம் சரணடையாமல் மன்னாருக்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து இரண்டாவது தடவையாக திருமணம் முடித்த அவர், மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடானது, அவருடைய இரண்டாவது மனைவியுடைய வீடு என்பதுடன், அந்த வீட்டிலிருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago