2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘வருகை தந்தால் வழங்கத் தயார்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 25 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு இரகசியப் பொலிஸார் தன்னிடம் வருகைதருமிடத்து, தான் அதற்குத் தேவையான பதிலை வழங்கத் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  லசந்த கொலை தொடர்பில் அமைச்சரான பீஃல்ட் மார்ஷல் பொன்சேகா வழங்கியிருந்த வாக்குமூலம் தொடர்பில், ஆங்கிலப் பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி தொடர்பில், அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

குறித்த கொலை தொடர்பில், வேறு யாரும் முன்வைத்து வரும் விதத்தில் பதிலளிப்பதற்கு தான் தயாரில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.  

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்தவும் தான் தயாரென்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்குத் தெரிந்தே நடந்தது என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும், பீஃல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.  

இதுகுறித்து மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, 

“லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.  

இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணை நடத்தினால், கொலையாளியின் அடையாளங்களை வெளிப்படுத்துவேன்.  

சில தரப்பினர், விளைவுகள் அல்லது தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல், இலகுவாக கருத்துகளை வெளியிடுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .