2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வறுமையிலிருந்து மீட்கும் ஆண்டாக 2017 பிரகடனம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2017ஆம் ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அமைவாக, வறுமையிலிருந்து மக்களை மீட்டுக்கொள்ளல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து, சகலரையும் ஒன்றிணைக்கும் வகையில், எதிர்வரும் 2017ஆம் ஆண்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துதல், ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கூடிய குழுவொன்றின் மூலம் இவ்வேலைத்திட்டத்தை மேற்பார்வையிடுதல் என்பன இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .