2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

1,000 ரூபாய் வர்த்தமானியை எதிர்த்து 20 மனுக்கள் தாக்கல்

Editorial   / 2021 மார்ச் 15 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமாக 1,000 ரூபாவை வழங்கவேண்டுமென அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை இரத்துச் செய்யுமாறு கோரியே, 20 பெருந்தோட்டங்கள் இந்த ரிட்மனுக்களை நேற்று (15) தாக்கல் செய்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உடனடியாக அதிகரித்ததன் ஊடாக, அரசாங்கத்துக்கு கூடுதலாக வரிச்செலுத்தும் பெருந்தோட்ட கைத்தொழில் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை, நிறுவனங்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயலாம். ஆகையால், அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானம் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்குமாறு அந்த ரிட்மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனம், எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 நிறுவனங்களே இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுக்களில், கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் ஷந்திரகீர்த்தி, தேயிலைத் தொழில் தொடர்பிலான சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடும் பெருந்தோட்ட நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ​தொழில்புரிகின்றனர் என்றும் இரண்டையும் பயிரிடும் நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தேயிலை, இறப்பர் தொழில்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 900 ரூபாயாகவேண்டும். அத்துடன், வரவு-செலவுத்திட்ட நிவாரம் 100 ரூபாயாகவும் சேர்த்து மொத்தமாக 1,000 ரூபாவை நாளொன்றுக்கு வழங்கவேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X