2026 மே 04, திங்கட்கிழமை

1,000 ரூபாய் விவகாரம்: ஏப்ரல் 5 தீர்ப்பு

Editorial   / 2021 மார்ச் 31 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாயை வழங்கவேண்டுமென விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, கைவிடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு மற்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா அல்லது இல்லையா என்பது தொடர்பில், ஏப்ரல் 5ஆம் திகதியன்று தீர்ப்பளிக்கப்படும்.

இதுதொடர்பிலான தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) விடுத்தது.

இந்த ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர (தலைவர்), மாயாதுன்ன கொ​ரயா ஆகியோரடங்கிய குழுவின் முன்னிலையில் இன்று (31) அழைக்கப்பட்டன. அதன்​போது இருதரப்பினராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன அவற்றை ஆராய்ந்ததன் பின்னரே மேற்கண்டவாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அக்கரப்பத்தனை மற்றும் எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட 20 பேர், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களில், பெருந்தோட்டத்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தேயிலை தொழில்துறை தொடர்பிலான சம்பள நிரணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .