2025 மே 22, வியாழக்கிழமை

‘10 அரசியல் கைதிகள் 85 வருடங்கள் சிறையில் வாடுகின்றனர்’

Freelancer   / 2025 பெப்ரவரி 28 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை சபையில் சமர்ப்பித்த இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், மனிதாபிமான அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) ந உரையாற்றுகையிலேயே சிறீதரன் எம்.பி குறித்த பெயர் பட்டியலை சமர்ப்பித்தார்.

அதாவது கதிர்காமத் தம்பி சிவக்குமார், விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார், ஜோன்ஷன் கொலின் வெலன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச்.உமர் ஹதாப், தங்கவேலு நிமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பிஐயா பிரகாஸ் ஆகியோரில் இரண்டு பேர் 30 வருடங்களாகவும், மூவர் 17 வருடங்களும், ஒருவர் 22 வருடங்களாகவும் மற்றும் நான்கு பேர் 16 வருடங்களாக சிறையில் வாடுகின்றனர் என்றார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X