Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செயற்பாட்டில் இருக்கும் 7 நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றவும் 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்ச்ரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனமதி வழங்கியுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (8) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாட்டில் தற்போது 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 276 பிரதேச சபைகளும் காணப்படுகின்றன.
அதற்கமைய 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படும் நிலையில், அந்தந்த காலப்பகுதிகளில் குறித்த பிரதேசங்களில் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் , மக்களின் தேவைப்பாடுகள் அதிகரிப்பு என்பவற்றை ஆராய்ந்து குழுவொன்றினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை கவனத்தில்கொண்டு, களுத்துறை, வவுனியா, புத்தளம், மன்னார், கேகாலை, அம்பாறை, திருகோணமலை ஆகிய நகர சபைகளை மாநகர சபைகளாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதேச்சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களின் 10 பிரதான நகரங்களில் மாநகர சபை அல்லது நகர சபையாக தரமுயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
6 hours ago
7 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
17 Aug 2025