2025 ஜூலை 09, புதன்கிழமை

100 நாள்களைக் கடந்தார் ஜனாதிபதி

Editorial   / 2020 பெப்ரவரி 25 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்று இன்று (25) 100 நாள்கள் நிறைவடைகின்றன.

கடந்த நூறு நாள்களில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு.

கல்வி மற்றும் எதிர்கால தலைமுறைக்காக...

  • ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல்.

 

  • உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் கல்வியால் பூரணத்துவமடைந்த சமூகத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானமாகும்.

 

  • உயர்கல்வி வாய்ப்பைப் பெறாத இளைஞர், யுவதிகளை தொழிற்பயிற்சியும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவுடனும் கூடிய தொழில்நுட்பவியலாளர்களாக உருவாக்குவதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

  • இருபது வயதாகும்போது பட்டம்பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழிலுக்காக தயார்படுத்தும் வேலைத்திட்டமொன்றை அறிமுகம்செய்தல்.

 

  • வறிய குடும்பங்களிலுள்ள எந்தவித தொழில் தகைமைகளையும் கொண்டிராத இளைஞர், யுவதிகளுக்காக செயலணியொன்றை ஸ்தாபித்து ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

  • எதிர்காலத்தில் தாதியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி நெறிகளை பயில்பவர்கள் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

  • கல்வி நடவடிக்கைகள் பற்றிய செயலணியொன்றை ஸ்தாபித்து கல்வி மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவை முறையாக திட்டமிட்டு வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

  • தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தை ஸ்தாபித்து தேசிய பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட பாடநெறிகளை உருவாக்குவதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

 

  • தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து தொழிலற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை தொழிலில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.

 

 

  • வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் வயதெல்லையை 45 வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

அரச சேவைக்காக

 

  • அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது விசேட நிபுணர் குழுவின் சிபாரிசை பெற்றுக்கொள்ளல்.

 

  • அரச நிறுவனங்களில் ஜனாதிபதி அவர்களினதும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினதும் நிழற்படங்களுக்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.

 

  • அரச நிறுவன தலைவர்களின் சம்பள திருத்தம், 20 இலட்சமாகக் காணப்பட்ட டெலிகொம் நிறுவன தலைவரின் சம்பளத்தை இரண்டரை இலட்சமாக குறைத்தல்.

 

  • அரச நிறுவனங்களில் பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

  • அரச நிறுவனங்களில் அவசியமற்ற அனைத்து வைபவங்களையும் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

  • சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும்போது அனைத்து மாவட்டங்களும் சமமாக உள்வாங்கப்படுமாறு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளமை அரச சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான தீர்மானமாகும்.

 

  • அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் மற்றும் வினைத்திறன் உள்ள உயர் நிறுவனங்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

 

  • இலாப நோக்கமற்ற நிறுவனங்களை மக்கள் விருப்பத்திற்குரிய சேவை வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

 

  • வினைத்திறனுள்ள மக்கள் சேவைக்காக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்புக்கு உள்வாங்குதல்.

 

  • 1919 அரச தகவல் மையத்தை உடனடியாக இற்றைப்படுத்தல்

உள்நாட்டு விவசாயத் துறையை மேம்படுத்தி எமது மரபுரிமைகள் மற்றும் தனித்துவத்துடன் கட்டியெழுப்பப்படும் பொருளாதார கொள்கையொன்றை நோக்கி…

 

  • பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையின் துரித அபிவிருத்திக்கான திட்டமிடல் (2025 ஆகும்போது 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானம் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.)

 

  • 300 மில்லியன்களுக்கு குறைந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்களை மீளச் செலுத்தும்போது பிணையாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் ஏல விற்பனையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

  • பட்டங்கள், வெசாக் கூடுகள் போன்ற உற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குதல்.

 

  • அரச முதலீடுகள், தேசிய அபிவிருத்தி திட்டங்கள், பெறுகை செயற்திட்டங்களின் பகுப்பாய்வு, முகாமைத்துவ துறைகளை வினைத்திறனாக்குவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகத்தை நிறுவுதல்.

 

  • கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்திக்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றலில் அமைச்சு மட்டத்தில் செயலணியொன்றை நிறுவுதல்.

 

  • தேசிய கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறையில் மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மணல், களிமண் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் முறையை நீக்குதல்.

 

  • பாரம்பரிய சிறு கைத்தொழில் துறையில் ஈடுபடுபவர்கள் தமக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கான திருத்தங்களை அறிமுகம் செய்தல்.

 

  • மாதாந்தம் 21 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்தப்பட்ட தனியார் கட்டிடத்தில் இயங்கிய விவசாய அமைச்சினை அங்கிருந்து அகற்றி கமநல சேவைகள் நிலையத்திற்கு கொண்டு செல்லல்.

 

  • கோதுமை மா இறக்குமதியில் நிலவிய பிரச்சினையை நீக்குவதற்காக ஏனையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல்.

 

  • விவசாயம், வர்த்தகம் அல்லது வீடமைப்புக்காக 30 வருட  குத்தகை அடிப்டையில் ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல்.

 

  • மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை நிறுத்துதல்.

 

  • பெரும்போகத்தின் போது ஒரு கிலோகிராம் நெல்லுக்கு ரூபாய் 50 குறைந்த விலையை நிர்ணயித்தல்.

 

  • நியமங்களை பூர்த்திசெய்யாத ஒரு கிலோகிராம் நெல்லுக்கு ரூபாய் 44

 

  • மூடப்பட்டுள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்களை வலுவூட்ட நடவடிக்கை.

 

  • வறுமையை ஒழிக்கவும் வாழ்வாதார அபிவிருத்திக்காகவும் செயலணியொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

 

நாட்டுக்கும் மக்களுக்கும் நேயமான அரச நிர்வாகத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுள்ள முன்னுதாரண நடவடிக்கைகள் ஏராளமானதாகும்.

 

  • கடந்த அரசாங்கத்தை விமர்சிக்காது புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுத்து செல்லுதல்.

 

  • அரச ஊடக நிறுவனங்களின் சுயாதீன செயற்பாட்டினை உறுதி செய்தல்.

 

  • ஜனாதிபதி அலுவலக ஆளணியினர் மற்றும் வாகன பேரணியை மட்டுப்படுத்தல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக தமது சொந்த வீட்டினை தேர்ந்தெடுத்தல்.

 

  • இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையை 16ஆக குறைத்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையும் குறைக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தல்.

 

  • பொதுமக்களின் நிதியில் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுக்கு அரசியல்வாதிகளின் உருவப்படம் தாங்கிய பெயர்பலகைகளுக்கு பதிலாக வீதிப்பெயருடன் அரச இலட்சினையை காட்சிப்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.

 

  • தமது பதவிக் காலத்துக்குள் நாடாளுமன்ற அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வுக்காக பெருமளவு செலவில் ஏற்பாடு செய்யப்படும் இராணுவ அணிவகுப்பு போன்றவற்றை தடை செய்தல்.

 

 

பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

 

  • முதன்முறையாக வீடொன்றினை கொள்வனவு செய்யும்போது சலுகை வட்டி வீதத்துடன் நீண்டகால கடன் வழங்குதல்.

 

  • உறுதிச் சான்றிதழ்களை (COC) ஒரே தினத்தில் வழங்குதல்.

 

  • வீடுகள் மற்றும் சிறு வியாபார கட்டிட நிர்மாணிப்பின்போது பூரணப்படுத்தப்பட்ட திட்ட வரைபடங்களுக்கு ஒரே தினத்தில் அனுமதியளித்தல்.

 

  • வீடில்லாத வறிய குடும்பம் ஒன்றை தெரிவுசெய்து ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில்​ 14,000 வீடுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.

 

  • கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்.

 

  • கிராமிய மக்களுக்காக 150,000 குடிநீர் இணைப்புகளை ஆரம்பித்தல்.

 

  • தொலைபேசி கட்டணத்துடன் அறவிடப்படும் 25 சதவீத வரியினை குறைத்தல்.

 

  • 15 சதவீத VAT வரியை 8 சதவீதமாகக் குறைத்தல்.

 

  • அனர்த்த நிலைமைகளின்போது போதுமான நிவாரணங்களை வழங்குவதற்கு தடையாகவுள்ள சுற்றுநிரூபங்களை திருத்துவதற்கு அறிவுறுத்தல்.

 

  • வன ஒதுக்கீடுகளில் வசிக்கும் மக்களை பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

 

  • இலகு வாகனங்களுக்கான சாரதி அத்தாட்சிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு கண் பரிசோதனையை மாத்திரம் மேற்கொள்ளல்.

 

 

  • நாடு பூராகவும் சிறிய நகரங்களை அழகுபடுத்தி நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

 

  • ஜனவரி 01ஆம் திகதி முதல் ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு உரிய பாடகர், பாடகிகளுக்கு பாடல் உரிமைக்கான கொடுப்பனவினை வழங்குதல்.

 

  • பாதாள உலக கோஷ்டியினரைக் கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் தேடுதல்களில் ஈடுபடுவதற்கு பொலிஸ் அதிரடிப்படையினருக்கு போதுமான அதிகாரங்களை வழங்குதல்.

 

  • இந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதித்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.

 

  • 09 மாகாணங்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்திற்கு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்.

 

  • சுற்றாடலை தூய்மைப்படுத்தல் தொடர்பில் பொலிஸாரினதும் ஏனையவர்களினதும் கவனத்தை ஈர்ப்பதற்கான துரித வேலைத்திட்டம்.

 

  • மார்ச் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த சம்பளத் தொகையை 1000 ரூபாவாக நிர்ணயித்தல்.

 

  • குறைந்த வருமானமுடைய மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல்.

 

  • குறைந்த வருமானம் உடையவர்களுக்காக உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய விசேட இலத்திரனியல் அட்டையை விநியோகித்தல்.

 

  • வறுமை மற்றும் குறைந்த வருமானமுடையோரை அடையாளம் கண்டு அவர்களுக்காக காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் ‘பிம் சவிய’ உடன் தொடர்புகளை மேற்கொண்டு விவசாய உற்பத்தி மற்றும் வீடு, வியாபாரத்திற்கான 30 வருட குத்தகை அடிப்படையில் ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல்.

 

  • நாட்டிலிருந்து வெளியேறும்போதும் நாட்டுக்குள் பிரவேசிக்கும்போதும் எந்தவொரு விமானப் பயணியும் சங்கடங்களுக்கோ அல்லது தாமதங்களுக்கோ உள்ளாகாதவாறு விமான நிலையத்தின் செயற்பாடுகளை முறைமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தல்.

 

  • இந்நாட்டின் அனைத்து காணிகளையும் உடனடியாக அளவீடு செய்து நிறைவு செய்வதற்கு குறித்த பிரிவினருக்கு பணிப்புரை வழங்கல்.

 

  • மத்திய மற்றும் ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளை உடனடியாக நிர்மாணிப்பதற்கான ஆலோசனை வழங்கல்
  • இரத்தினபுரி அதிவேகப் பாதைக்கு முன்னுரிமை
  • கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல்களுக்கு உடனடித் தீர்வு
  • காலி வீதிக்கு சமனாக கடற்கரையோர பாதை பாணந்துரை வரை
  • பொது போக்குவரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்.
  • நிர்மாணப்பணிகள் உள்நாட்டு பொறியியலாளர்களின் தலைமையில்

 

சுயாதீன பொருளாதார கொள்கையை நோக்கி...

 

  • சகல மாவட்டங்களிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அவற்றுக் அரசினூடாக அனுமதியளித்து வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்தல்.

 

  • எம்சீசீ ஒப்பந்தம் தொடர்பில் விரிவான கற்கையை மேற்கொண்டு சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றினை நியமித்தல்.

 

  • நாட்டிற்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

 

  • கடந்த அரசாங்கம் கைவிட்டிருந்த பாரிய அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 

அனைவருக்கும் பொதுவான சட்டம் ஒன்றுக்காக

 

  • எந்தவொரு நபரையும் கைது செய்யும்போது தனிப்பட்ட புகழுக்கோ அல்லது சமூக அந்தஸ்துக்கோ பங்கம் ஏற்படாத வகையில் மிகக் கவனமாகவும் சட்டத்திற்குட்பட்ட வகையிலும் செயற்படுவதற்கு பதிற் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்குதல்.

 

நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு உடனடித் தீர்வு

 

  • கொரோனா வைரஸ் பரவுகின்ற சீனாவில் வசித்து வந்த அனைத்து மாணவர்களையும் திருப்பி அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் மற்றும் இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்தல்.

 

  • வுஹான் நகரத்தில் இருந்த மாணவர்களை தாய் நாட்டுக்கு அழைத்துக்கொண்ட ஐந்தாவது நாடாக இலங்கை காணப்பட்டதன் ஊடாக சர்வதேச ரீதியாக நாட்டுக்கு பெருமையை பெற்றுக்கொடுத்தல்.

 

விசேட தருணங்கள்

 

  • ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் சமூகமளித்த இந்நாட்டின் முதலாவது மற்றும் ஒரே ஆட்சியாளராக டெங்கு தடுப்பு ஊழியர்சங்க ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொள்ளல்.

 

  • வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு, சிறைக் கைதிகள் பற்றி கேட்டறிதல் மற்றும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி விசாரிப்பதற்காக குழுவொன்றை நியமித்தல்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .