2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

1000 ரூபாய்க்கு அமைச்சரவை அனுமதி

J.A. George   / 2021 ஜனவரி 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் இதற்கான அதிகரிப்பை மேற்கொள்ளும் வகையில், தொழில் உறவுகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயற்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும், அது வெற்றியளிக்கவில்லை.

பெருந்தோட்ட முதலாளிமார் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள், நாளாந்த சம்பளத்தை 920 ரூபாய் வரை மாத்திரம் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, வரவு - செலவுத் திட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .