S.Renuka / 2026 மார்ச் 23 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டில் வசித்த சிறுவன் ஒருவர் 13 வயதான சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 2024 ஒக்டோபர் மாதத்தில் அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், அந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த 15 பேரில் 6 பேர் மாணவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் நண்பர்கள், மற்றும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் அறியப்படுகிறது மீதம் உள்ள 9 பேரும் நண்பர்களின் நண்பர்கள் என்றும், இதில் ஒரு ஆசிரியர் அடங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
மீதம் உள்ள 9 பேரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும். இவர்கள் மீதும் சட்டம் பாய்ந்துள்ளது. முதலில் 16 வயது இளைஞர் இந்த சிறுமியை வன்கொடுமை செய்த பின்னர், தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ள விடையம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
13 வயது சிறுமி மீது நடந்ததாக கூறப்படும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான வழக்கு தற்போது செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சிறுமி தற்போது சென்னையில் கல்வி பயின்று வருவதால், விசாரணை சென்னை சிறார் நீதிமன்றத்தில் நடந்தால் அவளுக்கு எளிதாக இருக்கும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் 2024 ஒகஸ்ட் மாதத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. பெற்றோர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டில் வசித்த சிறுவன் ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு 2024 ஒக்டோபர் மாதத்தில் அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், அந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் 2024 நவம்பர் மாதத்தில் மேலும் சில வயது வந்த நபர்களும் சேர்ந்து சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மொத்தமாக இந்த வழக்கில் 15 பேர் சம்பந்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 6 பேர் சிறார்கள், மற்றவர்கள் வயது வந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் குற்றவாளிகளின் மொபைல் போன்களில் பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2025 மே மாதத்தில் சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருந்தபோதுதான் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், அதற்குள் சிறுமிக்கு குழந்தை பிறந்ததாகவும், பிறந்த இரண்டு நாட்களிலேயே அந்த குழந்தை உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை மாநில போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 9 பேருக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 6 சிறார்களுக்கு எதிரான வழக்கு செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது விசாரணையை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.
47 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago