Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பணம், புகழ், வசதிகள் வந்த போதிலும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்' என, செயின் பறிப்பு வழக்கில் கைதான, திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி, (வயது 50). இவர், காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்னை திரும்பிய போது, அவரது 5 சவரன் நகையை பெண் ஒருவர் திருடியுள்ளார்.
கோயம்பேடு பொலிஸார் விசாரித்து, திருப்பத்துார் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி தலைவரான, தி.மு.க.,வைச் சேர்ந்த பாரதி,(வயது 51), என்பவரை கைது செய்தனர்.
பொலிஸாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:
நான், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்துார், வேலுார், கிருஷ்ணகிரி என பல இடங்களில், ஓடும் பஸ்களில், பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன்.
நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன். கடந்த 15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருடிய நகை களை விற்று கிடைத்த பணத் தில், சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி உள்ளேன்.
ஊராட்சி தலைவியான பின், திருட்டு தொழிலை விட்டு விடும்படி உறவினர்கள் கூறினர். என்னால் திருடும் பழக்கத்தை விட முடியவில்லை. பணம், புகழ், வசதிகள் வந்த பின்னரும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
'இனி திருடவே கூடாது' என, ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால், திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் தோற்று விடுவேன். என் திருட்டு பழக்கத்தால் கூனி குறுகி நிற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago