Editorial / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த சிறுமி, வியாழக்கிழமை (16) அதிகாலை, தனது வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். அச்சிறுமியை பெற்றோர் தேடிச் சென்ற நிலையில், வீதியில் இளைஞன் ஒருவன் நின்றிருந்துள்ளார். அவரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago