2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘பெயர்ப்பட்டியலை பகிரங்கமாக வெளியிடவும்’

Gavitha   / 2017 ஜனவரி 15 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ரோயல் கல்லூரியின்  முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான திருத்தப்பட்ட பெயர்ப்பட்டியல், பகிரங்கமாக வெளியிடப்படல் வேண்டும் என்று, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

2017ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்தில் மாணவர்களை உள்வாங்கும் போது, 147 பேரில், அவர்களின் இருப்பிடம் பற்றிய விசாரணையின் பின்னர், 31 பேர் அகற்றப்பட்டனர். ஏனையவர்களுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.  

 முறையற்றவகையில் அகற்றப்பட்ட மாணவர்கள் 31 பேருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட 31 பேரின் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று, இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .