2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘2,500 ரூபாய் மீண்டும் வேண்டும்’

Gavitha   / 2017 ஜனவரி 15 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்த குடும்பங்களுக்கு, அவர்களது வீடுகளை முன்னேற்றிக்கொள்ளும் பொருட்டு கொடுக்கப்பட்ட 2,500 பணத்தை மீளச் செலுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, குறித்த தொகையானது, திவினெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம், சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.  

இந்தச் சமுர்த்தி திட்டத்தின் கீழ், 1.4 மில்லியன் மக்கள் கணக்கெடுக்கப்பட்டிருந்தனர். எனினும், கொடுக்கப்பட்ட பணத்தை மீள சேகரிக்குமாறு, மாவட்ட மட்டத்திலான தலைவர்களுக்கு, திவிநெகும திணைக்களம், சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது. மக்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை, திறைசேரியிலிருந்து பெறமுடியாமையினால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

இதன்பிரகாரம், பயனாளிகள் பெற்ற பணத்தை அடுத்த மாதத்தில் இருந்து தவணை முறையில் செலுத்துமாறும், எனினும் சில பயனாளிகள் முழுமையான தொகையை ஒரேதடவையில் செலுத்துதல் வேண்டும் என்றும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .