Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 24 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாடாளுமன்றத்தில் ‘தலை’ மாற்றும் செயற்பாடுகள் தற்போது மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. அவை தொடர்பில், சொல்லக்கூடாத பல கதைகள் உள்ளன” என்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதான நடவடிக்கைக் காரியாலயத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ள பேரணி தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
அதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,
“20 வருடங்களுக்கு மேல், அரசியல் செய்தமை. நன்றாகவே போதுமானதாகும். எனினும், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாதகமான செயற்பாடுகள் காரணமாக, அரசியலிலிருந்து விலக முடியாத நிலைமையொன்று தனக்கு ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் போது, வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்ததாகவும், முகத்தை பார்த்து சிரிக்கவே மாட்டேன் என்று, கிளைச் சங்கங்களின் கூட்டங்களுக்கு செல்கின்ற போது, மக்கள் தனக்கெதிரான கண்டனத்தை முன்வைக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Aug 2025