Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 04 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பத்திரிகையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில், அவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பாடசாலை சிறுவர்களை ஆசை வார்த்தை கூறி வனப்பகுதிகளுக்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மிரட்டி அந்த சிறுவர்களுடன் அவர் மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் 2018 ஆம் ஆண்டு 28ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. அந்த பத்திரிகையாளர் 21 சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பில் பைந்தூர் பொலிஸில் 16 வழக்குகளும், கங்கொல்லி பொலிஸில் 3 வழக்குகளும், குந்தாபுரா புறநகர் மற்றும் கொல்லூர் பொலிஸில் தலா ஒரு வழக்கும் பதிவாகி இருந்தன.
இதுதொடர்பான வழக்குகள் உடுப்பி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் போக்சோ விரைவு நீதிமன்றம் ஆகியவற்றில் நடைபெற்று வருகின்றன.. இதுவரை 11 வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் 8 வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு எதிரான 2 வழக்குகளில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, ஒரு வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025