Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2021 நவம்பர் 04 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா தொற்றால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடி காணி முடிவுறும் தருவாயில் உள்ளதால், இனி அங்கு 250 – 300 வரையான உடல்கள் மாத்திரமே நல்லடக்கம் செய்ய முடியும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
மஜ்மா நகர் மையவாடியில் இதுவரை 3,183 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து இன மக்களின் உடல்களையும் எமது பிரதேச சபை ஊழியர்கள் மிகவும் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வருகின்றனர் என்றும் தவிசாளர் தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த மையவாடியில் நீதிமன்ற அனுமதியின் பிரகாரம், கொரோனா தொற்று அல்லாத 106 அநாதரவான உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago