R.Maheshwary / 2021 மார்ச் 30 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுத்திகரிப்பு செய்யப்படாத தேங்காய் எண்ணெயை விற்பனை செய்த மூன்று நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள இலங்கைத் தர நிர்ணய சபை, மேற்படி நிறுவனங்களின் எண்ணெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனங்களின் எண்ணெய் மாதிரிகளில், ‘அஃப்லடொக்சின்’ எனும் விஷ இரசாயனம் காணப்பட்டது என்றும், மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் தொடர்பில், உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, அச்சபை அறிவுறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .